என்.சரவணன்
இலங்கையில் நடத்தப்பட்டு வரும் இன அழிப்பு யுத்தம், மற்றும் அதன் காரணமாக ஏற்படும் அழிவுகள், இழப்புகள் என்பனவற்றை மூடிமறைப்பதற்கு அரசு செய்தித் தணிக்கையை அமுல்படுத்தி வருகிறது. அரசின் தரப்பில் இதற்கு கூறப்பட்டுவரும் சாட்டு, எதிரிக்கு அரசின் இரகசிய தகவல்கள் கிட்டாமல் செய்வது என்பதே. ஆனால் அரசுடன் போரிட்டு வரும் புலிகளைப் பொறுத்தளவில் தகவல்களுக்கு இந்த தொடர்பு சாதனங்களை நம்பி இல்லை என்பதை எவரும் அறிவர்.
எனவே இந்த செய்தித் தணிக்கை மக்களுக்குத் தான். இந்தப் போருக்கு முழுக்க முழுக்க மக்களிடம் இருந்து பலாத்காரமாக வரி அறவிடப்பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து பலாத்காரமாக வரியைப் பிடுங்கி அப்பணத்தில் யுத்தம் செய்து கொண்டு மக்களுக்கே அது பற்றிய உண்மையை மறைத்து வருகிறது.
சுருக்கமாகச் சொல்லப்போனால் போரை விலை கொடுத்து வாங்கும் மக்களுக்கு போர் பற்றி அறியத் தடை!
இந்த செய்தித் தணிக்கையானது அவசரகாலச் சட்டத்தின் கீழேயே அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செய்தித் தணிக்கையின் மூலமாகவே இன அழிப்புப் போரை மூடி மறைத்து வருகிறது அரசு. அப்படியென்றால் இந்த அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கும் தமிழ் கட்சிகளும் மக்களது எதிரிகளா இல்லையா? அவசரகால சட்டத்துக்கு ஆதரவளிப்பவர்கள் தணிக்கைக்குப் பொறுப்பானவர்களா இல்லையா? தணிக்கைக்கு பொறுப்பானவர்கள் இனஅழிப்பு மூடிமறைப்புகளுக்கும் பொறுப்பானவர்களா இல்லையா?
சமீபத்தில் அமெரிக்காவில் அமெரிக்கன் ப்ரிடம் ஹவுஸ் (Freedom House) எனப்படும் நிறுவனம் உலகின் பல நாடுகளின் தொடர்பூடகக் கொள்கை பற்றி நடத்திய ஒரு ஆய்வொன்றின் இறுதி அறிக்கையில் இப்படிப்பட்ட போக்குகளை ”தொடர்பூடக மாபியா கொள்கை” (media mafia) என்றே குறிப்பிடுகிறது.
ஆனால் இலங்கையின் தொடர்புசாதன அமைச்சர் மங்கள சமவீரவோ ”உலகிலேயே சிறந்த தொடர்பூடக சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் இலங்கையில் தான் உள்ளனர்” என்கிறார்.
மேற்படி ஆய்வறிக்கையின்படி உலகிலேயே தொடர்பூடக சுதந்திரத்தை பேணுவதில் இலங்கை 110 இடத்தைத் தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரிடம் ஹவுஸ் நிறுவனம் அமெரிக்க அரசின் அனுசரணையுடன் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும். எனவே இந்த அறிக்கை ஒரு வகையில் அமெரிக்க அரசுக்கு சாதகமான அறிக்கையென்றோ அல்லது பக்கசார்பான அறிக்கையென்றோ கருதவும் இடமுண்டு. அதேவேளை அந்த ஒரே காரணத்துக்காக இதனை நிராகரித்துவிடவும் முடியாது. குறிப்பாக இலங்கையின் நடைமுறை பற்றிய அனுபவம் இங்குள்ள அனைவருக்கும் தெரிந்ததே.
ப்ரிடம் ஹவுஸ் இப்படியான அறிக்கைகளை சமர்ப்பித்து அமெரிக்க அரசுக்கு சில விதந்துரைப்புகளையும் செய்வது வழக்கம். உலகின் ஜனநாயக சுதந்திரத்தை விரிவாக்குவதே இவ்வமைப்பின் நோக்கமெனக் குறிப்பிடப்படுகிறது. அவ்வறிக்கையிலேயே இலங்கைக்கு 110வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன்படி அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என்பவற்றுக்கு வேறுவேறாக புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான்கு விடயங்கள் குறித்து இந்த இரு வகை ஊடகங்களுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
A= தொடர்பூடகங்களைப் பாதிக்கும் சட்டங்கள்.
B= தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான அரசியல் தலையீடுகள்.
C=தொடர்பூடகங்களின் மீதான பொருளாதார அழுத்தங்கள்.
D= வன்முறை நடவடிக்கைகள். (தொடர்பூடகவியலாளர்கள் கொலை செய்யப்படுதல், தணிக்கைச் சட்டங்கள், கைதுகள் போன்றவை)
இதில் 0-15 வரை புள்ளிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 0 புள்ளியும், அதிகளவில் வன்முறையான நாடுகளுக்கு 15 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி உலகில் அதிகளவில் மோசமான கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்ட நிலை ஆப்கானிஸ்தானில் இருப்பதாக இவ்வறிக்கையில் கூறப்படுகிறது. மொத்தம் கருத்துச் சுதந்திர நசுக்குதலில் 100 புள்ளிகளையும் அந்நாடு பெற்றிருப்பதாகக் கூறுகிறது. அந் நாட்டின் சகல தொலைகாட்சி மற்றும் வீடியோ இயந்திரங்களை அழிக்க தலிபான் இயக்கம் கட்டளை இட்டுள்ளதுடன், 1996இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சிச் சேவையை மூடிவிட்டனர். அந் நாடு கீழ்வரும் வகையில் புள்ளிகளைப் பெற்றுள்ளது.
A B C D tot
இலத்திரனியல் 15 15 15 5
அச்சு 15 15 15 5 = 100
இப்புள்ளியிடலின்படி இலங்கை பெற்றிருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை 58 ஆகும். அது கீழ்வரும் வகையில் அமைகிறது.
A B C D tot
இலத்திரனியல் 9 12 5 0
அச்சு 9 11 7 5 58
இதன்படி இலங்கை குறை சுதந்திரமுள்ள நாடாக இனங்காணப்பட்டுள்ளது.
1998இல் அறிமுகப்படுத்தப்பட்ட யுத்த செய்தித் தணிக்கை இலங்கையின் தொடர்பூடக சுதந்திரத்தை மட்டுப்படுத்தியிருப்பதாகவும், அது போல இராணுவ நடவடிக்கைகளாலும், அவற்றுடன் தொடர்புடைய காரணங்களாலும் அறிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அது போல பத்திரிகைக் காரியாலயங்களுக்கு புலனாய்வுப் பொலிஸார் நுழைவது போன்ற பல்வேறு விடயங்கள் இந்த அறிக்கையில் அவதானம் கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன்படி இலங்கையில் சட்டங்களைப் பாவித்தும், அரசியல் தலையீடுகள் புரிந்தும், பொருளாதார நெருக்கடிகளை கொடுத்தும், ஏனைய வன்முறைகளை கட்டவிழ்த்தும் தொடர்பு+டக சுதந்திரங்களின் மீது அரசு தலையீடு செய்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. 1-15 வரையான புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகள் 19 அடையாளம் காணப்பட்டுள்ளன. 16-30 வரையான புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகள் 49 அடையாளம் காணப்பட்டுள்ளன. 30 வரையான புள்ளிகளைக் கொண்ட நாடுகள் சுதந்திரமுடைய நாடுகள் (தொடர்பூடக விடயத்தில்) எனக் கொள்ளப்படுகின்றன. அடுத்தது 31-45 வரையான புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை 22, மேலும் 46-60 வரையான புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை 30 அடையாளம் காணப்பட்டுள்ளன. 31-60 வரையான இந்த வரையறைக்குள் அடங்கும் நாடுகள் குறை சுதந்திரமுடைய நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்குள் தான் இலங்கையும் (58) அடங்குகிறது.
61-75 வரையான புள்ளிகள் பெற்றுள்ள நாடுகளை சுதந்திரமில்லாத முதலாவது அணி நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நாடுகள் 42 அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி இலங்கை இந்த அணிக்குள் சிக்க இன்னும் 3 புள்ளிகள் தான் பாக்கி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 76-100 வரையான புள்ளிகள் பெற்றுள்ள நாடுகள் சுதந்திரமில்லாத இரண்டாவது அணி நாடுகளாக (மோசமாக கருத்துச் சுதந்திரத்தை நசுக்குகிற நாடுகளாக) அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட 24 நாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதற்குள் தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
எமது நாட்டில் வரையறையற்ற தொடர்பூடக சுதந்திரம் இருப்பதாக பிதற்றித் திரியும் அரசியல் தலைவர்களுக்கு இவ்வறிக்கையும், ”ஆர்ட்டிகள் 19” (Article) அறிக்கையும் தான் சமர்ப்பணம்.